வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் அரசாங்கம் விரைவில் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். Sri Lanka Government Cheating Tamil People Vijitha Herath Statement Tamil News
மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
வடக்கு முதலமைச்சர் மற்றும் தெற்கின் சில அரசியல்வாதிகளும் தொடர்ந்து இனவாதம் பேசி அரசியல் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
இவ்விடயம் ஒன்றும் புதிதல்ல வடக்கு முதலமைச்சரின் பிரதான கோரிக்கை வடக்கு மக்களின் காணி விடுவிப்பு விடயத்திலே தங்கியுள்ளது. இந்திய மீனவர்கள் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்படுவது தொடர்பில் இவர் இதுரையில் எவ்விதமான கருத்துக்களையும் குறிப்பிடவில்லை. இவர்கள் குறுகிய வட்டத்தில் இருந்துக கொண்டே செயற்படுகின்றனர்.
அரசாங்கம் காணிகளை விடுவித்து விட்டதாக கூறுகின்றது ஆனால் வடக்கு மக்கள் அது சர்வதேசத்தினை ஏமாற்றும் செயற்பாடு என்று குறிப்பிடுகின்றனர் .
மக்களின் கருத்துக்கள் உண்மையாகவே காணப்படும் வடக்கு மக்கள் அரசாங்கத்திடம் புதிய காணிகளை கோரவில்லை அவர்களின் பூர்வீக காணிகளையே கேட்கின்றனர். இது இவர்களின் உரிமையாகவும் காணப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் காணி விடுவிப்பினை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது தமிழ் மக்களின் மனங்களில் பெரும்பாண்மையினர் தொடர்பில் வேற்றுமையினை தோற்றுவிக்கும் . விடுதலை புலிகளின் போராட்டம் 2009 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது.
ஆகவே யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட காணிகளை இராணுவம் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எவ்வித அவசியமும் ஏற்படவில்லை.
வடக்கில் காணிகளை அரசாங்கம் விடுவிக்கும் பொது தென்னிலங்கையில் உள்ள சில இயக்கங்களும், எதிர் தரப்பினம் கடுமையாக எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர். இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் மீண்டும் விடுதலை புலிகளின் இயக்கம் தோன்றும் என்று வதந்திகளை பரப்பி அரசியல் இலாபம் பெற்றுக் கொள்கின்றனர்.. வடக்கு மக்களின் விடயத்தில் அரசியல் விடயங்களை மையப்படுத்தி செயற்படாமல் யதார்த்த நிலைமைகளுக்கு முன்னுரிமை வழங்கி தீர்வு காணப்பட வேண்டும் . இவ்விடயத்திற்கு மக்கள் விடுதலை முன்னியிணனர் ஆதரவினை வழங்குவார்கள் என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்