அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் தெரிவு!

0
232
Scott Morrison new Prime Minister Australia tamil news

அவுஸ்ரேலியாவின் 30 ஆவது பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Scott Morrison new Prime Minister Australia tamil news

மோரிசன் இரகசிய வாக்குப்பதிவில் பீட்டர் டட்டனை 45 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

அண்மைக் காலமாக ஆளும் லிபரல் கட்சிக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைந்து வந்ததுடன், ரேர்ண்புல்லின் எரிசக்தி கொள்கைக்கு அவரது கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியது.

அதன்படி அவரது கட்சி உறுப்பினர்கள் ரேர்ண்புல் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்ததற்கமைய கடந்த செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் ரேர்ண்புல் ஏழு வாக்குகளால் வெற்றியீட்டினார். குறித்த வாக்கெடுப்பில் ரேர்ண்புல்லுக்கு ஆதரவாக வாக்களித்த மூன்று அமைச்சர்கள், தங்கள் பதவிகளை இராஜினாமா செய்து ரேர்ண்புல்லுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதுடன், இரண்டாவது வாக்கெடுப்பிற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நடத்தப்பட்ட இரண்டாவது வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

அதற்கமைய பிரதமர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த முன்னாள் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் மற்றும் நிதியமைச்சர் ஸ்காட் மோரிசன் ஆகியோருக்கு இடையே தலைமைத்துவ வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

தலைமைத்துவ வாக்கெடுப்பில் நிதியமைச்சர் ஸ்காட் மோரிசன் பீட்டர் டட்டனை 45 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக கட்சி அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- Scott Morrison new Prime Minister Australia tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்