லிட்ரோ கேஸ் பெரும் ஊழல் – இன்று விசாரணை ஆரம்பம்!

0
677

அரச தலைவர் செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் சிறப்பு மேல் நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் சென்றுள்ளார். Litro Gas corruption Inquiry Begins Today Tamil News

கடந்த அரசின் காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கின் முதலாவது விசாரணைக்காகவே அவர் சிறப்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று சென்றுள்ளார்.

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கச் சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 24 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன், 61 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். வழக்குடன் தொடர்புடைய 92 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது வழக்காக இதுவாகும்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites