கையடக்கத் தொலைபேசிக்கான சிம் அட்டைகளை விற்பனை செய்யும் இருவர், இளம் பெண்களுடன் சேஷ்டை விட்டதால், அவர்களை பெண் குரலில் கதைத்து அழைத்த இளைஞர்கள் சிலர் அவர்களை நையப்புடைத்து அனுப்பிவைத்ததுடன், அவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிளையும் தீயிட்டு எரித்துள்ளனர் என யாழ் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. Jaffna Two Young Men Attack Misbehave Girls Tamil News
குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு கொக்குவிலில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாது ,
“யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் சிம் அட்டைகள் விற்பனை செய்து கொண்டிருந்தோம். அங்கு வந்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று எம்மை வாள் முனையில் கடத்திச் சென்றது.
கொக்குவில் கிழக்குப் பகுதிக்குக் கொண்டு சென்ற அந்தக் கும்பல் எம்மை வாள்களால் வெட்டிவிட்டு, எமது மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்து எரித்தது” என கைபேசி சிம் அட்டை விற்பனை செய்யும் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் தாம் இருவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , குறித்த சம்பவம் இரவு ஏழு மணியளவில் நடைபெற்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், குறித்த இரு இளைஞர்களும் இளம் பெண்களுக்கு விற்பனை செய்த சிம் அட்டைகளுக்கு அழைப்பு எடுத்து தொந்தரவு வழங்குபவர்கள் எனவும், பெண் பிள்ளைகளுடன் சேஷ்டைவிட்ட காரணத்தால்தான், இளைஞர்கள் சிலர் அவர்கள் இருவரையும் கொக்குவில் கிழக்குப் பகுதிக்கு அழைத்து தாக்கியுள்ளனர் எனவும் , அவர்களுக்கு அழைப்பை எடுத்து பெண் குரலில் கதைத்துதான் கொக்குவில் கிழக்கு பகுதிக்கு அழைத்து இரு இளைஞர்களையும் தாக்கிய பின்னர் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளது என விசாரணைகளில் கண்டறித்துள்ளனர்.
அத்துடன் தம்மை வெட்டினார்கள் என இளைஞர்கள் இருவரும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள போதும், அவர்களுக்கு அடி காயங்களே உள்ளன என பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்ந்து தாம் முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- வீதியை விட்டு விலகிய வாகனம் பள்ளத்தில் பாய்ந்து விபத்து
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்