அமெரிக்காவின் ஹவாய் தீவுப் பகுதியில் “ஹரிகேன் லேன்” எனப்படும் பாரிய சூறாவளி தாக்கியுள்ளது.Hurricane Lane hit Hawaiian island US tamil news
சூறாவளியைத் தொடர்ந்து அடைமழை, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு என்பன தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹவாய் தீவுகளின் பிரதான தீவான ஒகுவில் இன்று (வெள்ளிக்கிழமை) சூறாவளி தாக்குமென அமெரிக்க வானிலை அவதான நிலையம் நேற்றே எதிர்வு கூறியிருந்தது. குறித்த எதிர்வு கூறலின் பிரகாரம், இன்று காலை முதல் அடைமழையுடன் சூறாவளி தாக்கி வருகின்றது.
நேற்று மாலையிலிருந்து அடைமழை பெய்வதோடு, காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதனால் ஒகு தீவிலுள்ள வைலுகு ஆறு நிரம்பி வெள்ளம் வழிந்தோடுகின்றது. உறுதியான நிலங்கள்கூட சரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சூறாவளி மணிக்கு 7 மைல் வேகத்தில் வீசுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
வானிலை அவதான நிலையத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து நேற்று மூடப்பட்ட அரச பாடசாலை மற்றும் அலுவலகங்கள் இரண்டு நாட்களுக்கு திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டடிருந்தது. எனினும், சூறாவளியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாட்களில் அவற்றை திறப்பதற்கான அறிகுறி தென்படவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
tags :- Hurricane Lane hit Hawaiian island US tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராக ஸ்காட் மோரிசன் தெரிவு!
- உலகில் ஏழு நாட்களில் 144 நிலநடுக்கங்கள்…! அடுத்து நடக்கப்போவது இதுதான்: நிபுணர்கள் எச்சரிக்கை
- பாரிஸ் நகரில் ஐ.எஸ் தாக்குதலில் மூவர் பலி!!
- உலகில் விற்கப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானது – சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை
- பூமியில் ஊடுருவியுள்ள வேற்றுக்கிரக வாசிகள்…!!அதிர்ச்சிகரமான வீடியோ ஆதாரங்கள்!!
- அழுத குழந்தைக்கு சற்றும் யோசிக்காமல் தாய்ப்பால் கொடுத்த பொலிஸ் அதிகாரி
எமது ஏனைய தளங்கள்