“பிரபாகரனின் பிள்ளைகளில் என்னைப் பார்த்தேன்” – ராகுல்காந்தி

0
623
Rahul Ghandi Germany Prabakaran Death

எல்.ரீ.ரீ.டி அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது தான் மற்றும் தனது சகோதரி மிகுந்த மனவேதனை அடைந்ததாக என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். Rahul Ghandi Germany Prabakaran Death

ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி ஹம்பர்க் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராஜீவகாந்தி கொலை செய்யப்பட்டது குறித்து பேசிய ராகுல்,

“என் தந்தையைக் கொன்ற ஒரு மனிதன் இலங்கையில் ஒரு வயலில் இறந்து கிடந்ததை நான் கண்டபோது, ​​அதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.”

எனது சகோதரியான பிரியங்காவுக்கு அழைப்பை மேற்கொண்டு பேசினேன், நான் மகிழ்ச்சியடையவில்லை , எனக்கு ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. நான் கூறியது சரியே என பிரியங்கா கூறினார். தானும் மகிழ்ச்சியடையவில்லை என பிரியங்கா கூறினார். நான் மகிழ்ச்சியடையாமைக்கான காரணம் , அவரது பிள்ளைகளில் என்னைப் பார்த்தேன், அவர் அவ்வாறு விழுந்து கிடப்பதானது, என்னைப் போல பிள்ளைகள் அழுது கொண்டிருப்பதைக் கண்டேன்.

அவர் கெட்டவராக இருந்திருக்கலாம், ஆனால் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறை மற்றவர்களையும் பாதிக்கின்றது, என்னைப் பாதித்தமையைப் போல” எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவரின் மரணம் தன்னை வெகுவாகப் பாதித்ததாக ராகுல் காந்தி முன்னரும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.