ஹட்டனில் ஆற்றில் இருந்து நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்பு

0
536
Four year old boy found dead river Hatton

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி பிரதான ஆற்றுக்கு நீர் வழங்கும் கிளை ஆறான ரொத்தஸ் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து நான்கு வயது சிறுவனின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Four year old boy found dead river Hatton)

ஹட்டன் ரொத்தஸ் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதரன் சபித் என்ற குறித்த சிறுவன் நேற்று மாலை 6 மணியளவில் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் ஆற்றில் இருந்து குறித்த சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த வேளையில், அருகில் இருந்த ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.

காணாமல்போன சிறுவனை தேடும் பொழுது சிறுவனின் செருப்பு ஆற்றுக்கு அருகில் இருந்ததை கண்டு ஆற்றுப் பகுதியில் உறவினர்களால் தேடும் பொழுது சிறுவன் விழுந்த தூரத்தில் இருந்து அடித்துச் செல்லப்பட்டு, 100 மீற்றர் தூரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹட்டன் நீதவானின் மேற்பார்வையின் பின்னர் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Four year old boy found dead river Hatton