தங்க நகைகளை கடத்தி வந்த நான்கு பெண்கள் கைது

0
514
Four women arrested smuggling gold jewelry

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்க நகைகளை கடத்தி வந்த பெண்கள் நால்வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். (Four women arrested smuggling gold jewelry)

கைதான நான்கு பேரும் கொழும்பை அண்மித்த பிலியந்தலை, பத்தரமுல்லை, முல்லேரியா மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா சென்று இந்தியாவின் மும்பை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெட் எயார்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான 9று 255 ரக விமானத்தில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்கள் அவர்கள் அணிந்திருந்த ஆடையில் மிக சூட்சுமமான முறையில் நகைகளை மறைத்து கொண்டு வந்துள்ளனர்.

எனினும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் இவர்கள் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளனர்.

95 இலட்சத்து 71 ஆயிரத்து 320 ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் என சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Four women arrested smuggling gold jewelry