காதலன் தற்கொலை, காதலி வைத்தியசாலையில் : வவுனியாவில் சம்பவம்

0
788
boy commits suicide vavuniya

வவுனியா செட்டிக்குளத்தில் நேற்று(22) மதியம் 1 மணியளவில் காதலன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமையினையடுத்து காதலியும் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(boy commits suicide vavuniya)

செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் வசித்து வரும் 24 வயதுடைய இளைஞன் நேற்று மதியம் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

இவ் தகவலையறிந்த குறித்த இளைஞனின் காதலி நேற்று மாலை தற்கொலைக்கு முயன்ற சமயத்தில் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:boy commits suicide vavuniya,boy commits suicide vavuniya