50 ஆயிரம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை

0
842
50 thousand tear gas purchasing

வெளிநாட்டில் இருந்து 50 ஆயிரம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. (50 thousand tear gas purchasing)

நாட்டில் தற்பொழுது இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காகவே இவ்வாறு பொலிஸாரினால் பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள குண்டுகளுக்கு மேலதிகமாகவே இவை கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொலிஸார் பயன்படுத்தும் முகக் கவசங்கள் அண்மையில் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் பயன்படுத்தப்பட்ட பலகையால் செய்யப்பட்ட கைத்தடிகளுக்குப் பதிலாக 2000 இறப்பர் கைத்தடிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாடு முழுவதும் இடத்துக்கிடம் பொது மக்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் உட்பட சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றை உரிய முறையில் தடுப்பதற்கு தேவையான பொலிஸ் உபகரணங்கள் போதியளவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 50 thousand tear gas purchasing