பாக்கு மரங்களை வெட்டச் சென்ற 14 வயதுடைய சிறுவன் பலி

0
1222
14 year old boy kills

வெற்றிலைத் தோட்டத்தில் நடுவதற்காக பாக்கு மரங்களை வெட்டச் சென்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. (14 year old boy kills)

பாக்கு மரங்களை வெட்டியெடுத்து வருவதற்கு ஹெட்டிபொல பிரதேசத்தில் இருந்து பொல்கஹவெல பிரதேசத்திற்கு அயலவர் ஒருவரும் 14 வயதுடைய பாடசாலை மாணவனும் சென்றிருந்தனர்.

இதன்போது இவர்கள் வெட்டிய பாக்கு மரம், குறித்த மாணவனின் தலையில் வீழ்ந்தமையினால் இந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

வெட்டிய மரம் ஒன்று தனது அருகில் விழுவதைக் கண்ட இந்தச் சிறுவன் தப்பிக்க முயன்ற போது, கால் தடுக்கி கீழே வீழ்ந்தார்.

இதன்போது, வெட்டிய பாக்கு மரம் குறித்த சிறுவனின் தலையில் பட்டதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொல்கஹவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொல்கஹவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதுடன், பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 14 year old boy kills