மோடியை சந்திக்கின்றார் மைத்திரி!

0
406
Narendra Modi Maithiripala Meeting Nepal

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது Narendra Modi Maithiripala Meeting Nepal

பிம்ஸ்ரெக் எனப்படும் வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நேபாளத்தில் எதிர்வரும் 30, 31ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

காத்மண்டுவில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது, பக்க நிகழ்வாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை