சிறுமி ரெஜினா படுகொலை : சாட்சியாளரின் வீட்டில் சப்பாத்து!

0
682

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவனேஸ்வரன் றெஜினாவின் சப்பாத்துக்கள் தமது வீட்டில் காணப்பட்டதாக சிறுமியொருவர் குறிப்பிட்டுள்ளார். Jaffna Regina Murder Case New Turning Point Tamil News

மாணவி ரெஜினாவின் கொலை தொடர்பில் ஏற்கனவே மன்றில் சாட்சியமளித்த ஒருவரின் மகள், இவ்விடயத்தை அவரது உறவினர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

ரெஜினா படுகொலை தொடர்பான வழக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளான சுகாஷ் மற்றும் சுதாகரன் ஆகியோர் இவ்விடயத்தை மன்றின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமியையும் வழக்கின் சாட்சியாக ஏற்கனவே பெயர் குறிப்பிடப்பட்ட சிறுவன் ஒருவனையும் மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் இருவரையும் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

6 வயதான சிறுமி ரெஜினா, கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி பாடசாலை சென்று திரும்பியபோது காணாமல் போயிருந்தார்.

அதன் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மூவர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தற்போது கிடைத்துள்ள தகவலானது, வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites