கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு

0
437
Four people including Gotabhaya Rajapaksa invited

ஸ்ரீலங்கா மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கும் பொருட்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச உள்ளிட்ட 4 பேருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. (Four people including Gotabhaya Rajapaksa invited)

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவே இவ்வாறு அறிவித்தல் விடுத்துள்ளது.

கோட்டபாய ராஜபக்ச தவிர, சஜின் வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோருக்கும் இவ்வாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்டபாய ராஜபக்சவை எதிர்வரும் 29 ஆம் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டத்தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Four people including Gotabhaya Rajapaksa invited