திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அவரை கட்சியில் சேர்ப்பதாக இல்லை என்று ஸ்டாலின் முடிவொடு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி தனது ஆதங்கத்தை விரைவில் அவரது ஆதரவாளர்கள் மூலம் தெரிவிக்க உள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் , அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதி அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து, அழகிரி கூறியதாவது கருணாநிதி நினைவிடத்துக்கு வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி அமைதிப் பேரணி நடக்கிறது. இதில் 75 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள்.
அதுமட்டுமல்லாமல் ,கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் என் பக்கம் உள்ளார்கள் என்பதை நீருபித்து காட்டுவேன். தனிக்கட்சி பற்றி கேட்டு வருகிறார்கள். கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன.
அதை வெளியில் கூற முடியாது. அவர் எப்படி நினைத்தாரோ அப்படி செயல்படுவேன் என்றுதெளிவுபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஓரினச்சேர்க்கை இளைஞர்கள் – இணையதளத்தில் ஆபாச நேரடி காட்சி வெளியிட்டு சர்ச்சை
- இளம்பெண்ணை கற்பழித்து கொன்று காட்டில் வீசிய காமுகன்
- 6 வயது சிறுமியை கற்பழித்த காமுகன் – நடுரோட்டில் வைத்து எரித்த தந்தை
- கேரளாவுக்கு திருநங்கைகள் வெள்ள நிவாரணம் – ரூ.30 ஆயிரம் வழங்கி உதவிகரம்
- இளவரசன் மர்மமரணம் விசாரணை – முதலமைச்சரிடம் சிங்காரவேலன் அறிக்கை தாக்கல்
- தமிழகத்தின் கிராமப்புற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
- துயரத்திலும் ஆச்சர்யப்படுத்தும் கேரளா அரசு – நன்றிக்கெட்ட தமிழக அரசு
- மிரட்டிய எச்.ராஜா… – எதற்கும் அஞ்சாத மனுஷ்யபுத்திரன்…