முக்கிய பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கைது

0
337
Arrest Inspector two Constables robbery mistake Police

பாணந்துறை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், இரு பொலிஸ் கான்ஸ்டபில்கள் உட்பட 8 நபர்கள் கொண்ட குழுவொன்றை களுத்துறையில் வைத்து கைது செய்துள்ளதாக குற்றத் தடுப்புப்பிரிவினர் தெரிவித்தனர்.  Panadura Policemen arrest Kaluthara

இவர்கள் கொள்ளை ஒன்றுக்கு திட்டமிட்டதன் காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப் படை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரு கைத்துப்பாக்கிகளும் 20 துப்பாக்கி குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட குழுவில் தனமல்வில பிரதேசத்தின் பாதாள உலக கோஷ்டி உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை