யாழில் வைத்தியரின் வீடு மீது தவறுதலாகவே தாக்குதல் !

0
586

யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் வீதியில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளது. Jaffna Doctor House Attack Mistakenly Done Tamil News

தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.

தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.

இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்தது.

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அத்துடன், வைத்தியருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலைக் கண்டித்தும் குற்றவாளிகளை நீதியின் முன் முற்படுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். ஆரம்ப விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் லெனில் வைத்தியர் வீடு அடையாளம் தவறி தாக்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு வைத்தியரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும்.

முகப்புத் தோற்றளவில் வைத்தியரின் வீடும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த வீடும் ஒரே மாதிரியானவை. அதனால்தான் வைத்தியரின் வீட்டின் மீது தாக்கிவிட்டு கும்பல் தப்பித்துள்ளது.

தாக்குதலுக்கு இலக்கு வைத்த வீடு, கடந்த மாத இறுதியில் கொக்குவிலில் இடம்பெற்ற வாள்வெட்டுக் குழுவின் அடாவடிகளை அடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருடையது.

ஆவா குழுவுக்கும் அதற்கு எதிரான கும்பலுக்கும் இடையிலான மோதலின் தொடர்ச்சியே இந்தத் தாக்குதலாகும்.

தாக்குதல் நடத்தியவர்கள் சாதாரண டிலக்ஸ் மோட்டார் சைக்கிள்களிலேயே வந்துள்ளனர்.

தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர், என்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites