13850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

0
520

தலவாக்கலை பகுதியில் 13850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (13850 milligrams Kerala recovery five people arrested)

ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் குறித்த நபர்களால் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த போது, குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்ளை இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 13850 milligrams Kerala recovery five people arrested