தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட குழந்தையை வளர்க்க நடிகை ஆயத்தம்!!

0
131
valasaravakkam baby actress Geetha adopting, valasaravakkam baby actress Geetha, valasaravakkam baby actress, actress Geetha adopting, valasaravakkam baby, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

சென்னை வளசரவாக்கத்தில் தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல் வீசப்பட்ட ஆண் குழந்தையை வளர்க்க டிவி நடிகை ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.valasaravakkam baby actress Geetha adopting

கடந்த 15ம் திகதி சுதந்திர தினத்தன்று, எஸ்விஎஸ் நகர் 6வது தெருவில் அமைந்திருக்கும் கழிவு நீர் குழாயை காலையில் சில பூனைகள் சுற்றி வந்தன.

அதைக்கண்ட அப்பகுதி பால்காரர், என்ன இருக்கிறது என குனிந்து பார்த்த போது, பிறந்த குழந்தை ஒன்று இருப்பதைக் கண்டு கூச்சலிடவே, பெண் ஒருவர் ஓடி வந்து குழந்தையை மீட்டார்.

குழந்தையை மீட்ட அந்த பெண், அந்த குழந்தைக்கு சுதந்திரம் என பெயர் வைத்தார்.

பின்னர் அக்குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தையை வீசிச்சென்றவர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த குழந்தையை மீட்ட அந்த பெண் கீதா என்பதும் அவர் முன்னாள் டிவி நடிகை என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது. கீதா, கார்த்திகை பூக்கள், வாணிராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளவர்.

எஸ்விஎஸ் நகர் 6வது தெருவில் வசித்து வரும் கீதாவின் மகளுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று கிடைத்த குழந்தையை ஆசையோடு தூக்கி குளிப்பாட்டி, முதலுதவி செய்துள்ளார்.

தற்போது அக்குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என ஆசைப்படுகிறார் கீதா. தன்னிடம் அந்த குழந்தையை கொடுத்தால் சிறப்பாக வளர்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் கீதா.

தினமும் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு வருகிறார்.

Tag: valasaravakkam baby actress Geetha adopting

எமது ஏனைய தளங்கள்