காணிகளை விடுவிக்கும் இரா­ணுவ தள­ப­தி­யின் முடிவு முட்டாள்தனமானது! பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா சீற்றம்!

0
585

வடக்கில் பொது­மக்­களின் காணி­களை மீள ஒப்­ப­டைப்­ப­தற்­காக இரா­ணுவ முகாம்­களை மூடி, முகாம்­களின் அளவைச் சுருக்கும் இரா­ணுவ தள­ப­தியின் முடிவு முட்­டாள்­த­ன­மா­னது என்று அமைச்­சரும் முன்னாள் இரா­ணுவ தள­ப­தி­யு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­துள்ளார். North East Land Release Sarath Fonseka Angry Statement Tamil News

ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அவர் அளித்­துள்ள செவ்­வியிலேயே இதனைத் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,

நாங்கள் விடு­தலைப் புலி­களை அழித்து விட்டோம். அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான பின்­ன­ணி­யையும் அந்தப் பிர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கு­மான சூழலை உரு­வாக்­கி­யி­ருக்­கிறோம். அது போது­மா­ன­தல்ல.

அதி­காரப் பகிர்வை செய்ய வேண்­டு­மானால் நாம் பொது­ வாக்­கெ­டுப்­புக்கு செல்ல வேண்டும். பெரும்­பான்­மை­யான மக்கள் அதனை எதிர்க்­கி­றார்கள்.

தமிழ் மக்கள் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியில் ஆர்வம் கொண்­டி­ருக்­கி­றார்­களே தவிர அர­சி­யலில் அல்ல. மக்கள் எதனைக் கேட்­கி­றார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்­களின் தேவை­களை நிறை­வேற்ற வேண்­டுமே தவிர, அர­சி­யல்­வா­தி­களின் தேவை­களை அல்ல. சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் வடக்கிலுள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்ற வேண்டும் என்­கி­றார்கள். எந்த அடிப்­ப­டை­யிலும் அவர்­களின் அந்த அழுத்­தங்­க­ளுக்கு விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. நாட்டிலிருந்து இரா­ணு­வத்தை உங்­களால் அகற்ற முடி­யாது.

நாட்டின் எல்லா இடங்­க­ளிலும் இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்னம் இருக்க வேண்­டிய தேவையுள்­ளது. இரா­ணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும். வடக் கில் இருக்கக் கூடாது என்று உங்­களால் கூற­மு­டி­யாது. இரா­ணு­வத்தின் பரு­மனைக் குறைக்க வேண்­டிய தேவை இல்லை என்­பதே எனது கருத்து.

எனது தனிப்­பட்ட கருத்­தின்­படி, இரா­ணு­வத்தின் குறைந்­த­பட்ச பலம் 1,50,000 இற்கு மேல் இருக்க வேண்டும். உள்­நாட்டுப் பிரச்­சி­னைக்­காக மாத்­தி­ர­மல்ல. வெளி­நாட்டு அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட எந்­த­வொரு நிலை­மை­யையும் எதிர்­கொள்­வ­தற்கும் நாட்டின் இரா­ணுவம் தயா­ராக இருக்க வேண்டும்.

சிங்­கப்பூர் ஒரு சிறிய நாடு. அவர்கள் 3 மில்­லியன் பேரைக் கொண்ட இரா­ணுவப் படையை வைத்­தி­ருக்­கி­றார்கள். ஒவ்­வொரு குடி­ம­கனுக்கும் போரி­டு­வ­தற்­கான பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது. எனினும் அவர்கள் அணி­தி­ரட்­டப்­ப­ட­வில்லை.

வடக்கில் சில பகு­தி­களிலிருந்து இரா­ணு­வத்­தி­னரை முழு­மை­யாக வெளி­யேற்றக் கூடாது.

பொது­மக்­களின் காணி­களை திரும்ப அவர்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தற்­காக சில இரா­ணுவ முகாம்­களை மூடி, இரா­ணு­வத்­தினர் வச­முள்ள காணி­களின் அளவைக் குறைப்­பது பற்றி இரா­ணுவ தள­பதி பெரு­மை­யாகப் பேசி­யதைக் கேள்­விப்­பட்டேன். இது முட்­டாள்­த­ன­மா­னது.

ஒவ்­வொரு அங்­குல நிலத்­தையும் மக்­க­ளுக்கு மீள வழங்­கு­வ­தற்­காக முகாம்­களை மூடு­வ­தை­யிட்டு பெரு­மைப்­பட முடி­யாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்­களின் கருத்தைக் கேட்க வேண்டும். சரி­யான மதிப்­பீட்டை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites