முகப் புத்தகம் ஊடாக ‘பூகா பூகா’ இரவு களியாட்ட நிகழ்வு; பெண்கள் உட்பட 30 பேர் கைது

0
617
Night extravagant event arrested 30 people including women

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறமாக நடத்தப்பட்ட விருந்தொன்றில் வெவ்வேறு போதைப் பொருட்களை பாவித்த குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் உட்பட 30 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். (Night extravagant event arrested 30 people including women)

கைது செய்யப்பட்டுள்ள இந்த இளைஞர்கள் மத்தியில் ஐந்து பெண்களும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து எக்ஸயிஸ் என அழைக்கப்படும் போதை மாத்திரை, கஞ்சா, சட்டவிரோத சிகரெட், முத்திரை என்ற போதைப் பொருள்கள் ஒரு தொகையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முகப் புத்தகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு ‘பூகா பூகா’ என பெயரிடப்பட்டுள்ளதுடன் இதில் பங்குபற்றும் ஒருவரிடம் இருந்து 2500 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

உள்ளே நுழைந்தவுடன் அனைத்து போதைப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வசதிகள் அமைக்கப்பட்டிருந்தது.

விசேட அதிரடிப் படையினர் மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் உத்தியோகத்தர்கள் சிலர் இந்த நிகழ்வில் பங்கு பற்றுவது போன்று நடித்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் இன்று கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Night extravagant event arrested 30 people including women