பூதாகரமாகி வரும் எல்.ரீ.ரீ.ஈ ஆயுத விவகாரம்

0
424
Ltte weapons Muslim Ministers Tamil News

ஒரு நாட்டில் ஆயுதம் வைத்திருக்க வேண்டியவர்கள் பாதுகாப்புத் துறையினர் எனவும், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவராக இருந்தாலும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் பிரதமரிடம் கோரிக்கை விடுக்கின்றோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார். Ltte weapons Muslim Ministers Tamil News

யுத்தத்தின் பின்னர் எல்.ரி.ரி.ஈ. அமைப்பினரிடம் காணப்பட்ட ஆயுதங்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களில் கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆழமான பார்வையுடன் அக்கறை செலுத்தி, உரிய விசாரணை நடாத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் அரச படைகள் அன்றி வேறு எவரும் ஆயுதங்கள் வைத்திருப்பது பயங்கரவாதச் செயற்பாடுகளாகவே ஜனநாயக நாடுகளில் நோக்கப்படுகின்றன.

இந்த வகையில், புலிகளின் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான நோக்கம், குறித்த அமைச்சர்கள் அரசாங்கத்தை அச்சுறுத்துவதற்கான அவசியம் பற்றியும் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் அமைப்பின் குறிப்பிட்ட முக்கியஸ்தரிடமிருந்து அறிந்து கொள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, நாட்டின் பாதுகாப்பில் அக்கறையுள்ள அனைவரும் எதிர்பார்ப்பதாகவும் ஊடகப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.