வாஜ்பாயினால் தான் கடற்புலிகளை அழிக்க முடிந்தது! ரணில் உருக்கம்!

0
685

உண்மையான நண்பனாக இருந்து, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு உதவியவர் என்று மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க புகழாரம் சூட்டியுள்ளார். Indian Former President Atal Bihari Vajpayee Helped Sri Lanka Navy Tamil News

வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் பதிவேட்டில், கையெழுத்திட்ட பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மிகச் சிறந்த பிரதமர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார். அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பன். எல்லா நேரங்களிலும் அவர் சிறிலங்காவின் பக்கம் நின்றார்.

முன்னர் நான் சிறிலங்காவின் பிரதமராக இருந்த போது, விடுதலைப் புலிகள் மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருந்தனர்.

எமது பொருளாதாரம் பலவீனமாக இருந்தது. எமது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு வாஜ்பாய் உதவினார்.

இராணுவப் பயிற்சிகளை வழங்கினார். கடற்புலிகளை எம்மால் தடுக்க முடிந்தது என்றால், அது அவரால் தான். அவர் கடற்புலிகளுக்கு எதிராகப் போரிட எமக்கு உதவினார் என்று கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites