அம்பாந்தோட்டை அபகரிப்பு சீனாவின் இராணுவ மூலோபாயம்! பென்டகன் தெரிவிப்பு!

0
372

அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியமை சீனாவின் இராணுவ மூலோபாயத்தின் அங்கமாகவே உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சான பென்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Hambantota Harbour China Leasing Pentagon Report Tamil News

கடந்த ஜூலை மாதம் டிஜிபோட்டியில் சீனா தனது இராணுவத் தளம் ஒன்றை அமைத்த சில மாதங்களில் சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வசப்படுத்தியுள்ளது.

சீனாவின் பாதை மற்றும் அணைத் திட்டம், பீஜிங்கின் நலனுக்காக ஏனைய நாடுகளின் நலன்களை வடிவமைக்கும் நோக்கம் கொண்டது.

இந்தத் திட்டங்கள் சீனாவின் முலதனத்தைச் சார்ந்திருக்கும் நிலையை இந்த நாடுகளுக்கு ஏற்படுத்தக் கூடும்.

சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம் இதற்கு உதாரணம்.

கடனுக்குப் பதிலாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசு நிறுவனம் குத்தகைக்குப் பெற்றிருக்கிறது என்றும் பென்டகன் கடந்த வாரம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசுக்கு, இராணுவ மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள் தொடர்பாக பென்டகன் சமர்ப்பித்துள்ள ஆண்டு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites