ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

0
644
9 year old boy committed suicide

வவுனியா கற்பகபுரம் பகுதியில் காணாமல் போன சிறுவன் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (9 year old boy committed suicide)

9 வயதுடைய குறித்த சிறுவனை வீட்டில் இருக்குமாறு கூறி, 3 வயதுடைய அவரின் சகோதரனையும் அயல் வீட்டில் தங்கவைத்து விட்டும் தாயும் சிறிய தந்தையும் தொழிலுக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மாலை வீடு திரும்பி பார்க்கையில், 9 வயதுடைய சிறுவனை வீட்டில் காணாத நிலையில், குறித்த சிறுவனை தேடும் பணியில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, ஆடு வளர்க்கும் தொழுவத்தில் குறித்த சிறுவன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுவனின் சடலத்தை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 9 year old boy committed suicide