மலையகத்தில் சீரற்ற காலநிலை வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்

0
289
up country bad weather lion house fall roof damage Lankan latest news

நாவலப்பிட்டி கொலப்பத்தனை பகுதியில் லயன் குடியிருப்பில் வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது. up country bad weather lion house fall roof damage Lankan latest news

இதனால் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேதமாகியுள்ளதோடு, சுவர்களும் சரிந்து விழுந்துள்ளதன.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக குறித்த வீட்டிற்கு மின் இணைப்பும் தடைப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் பாதுகாப்பாக அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு தற்போது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.

முறிந்து விழுந்த மரத்தினை இதுவரை அப்புறப்படுத்தாத காரணத்தினால் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
up country bad weather lion house fall roof damage Lankan latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites