சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு

0
308
Train fares hiked first time 10 years Transport ministry tamilnews

(Train fares hiked first time 10 years Transport ministry tamilnews)

கடந்த 10 ஆண்டுகளின் பின்னர் புகையிரத கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் பீ.எஸ்.விதானகே தெரிவித்துள்ளார்.

புதிய புகையிரத கட்டண திருத்தத்தின் அடிப்படையில் 15% ஆல் புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளன.

குறித்த கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த திருத்தத்தின் போது குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டிற்கு பிறகு புகையிரத கட்டணத்தில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Train fares hiked first time 10 years Transport ministry tamilnews)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites