கைகுலுக்க மறுத்த தம்பதிக்கு இப்படி ஒரு கொடுமையா?

0
187
Muslim couple refused shake hands denied citizenship Switzerland

(Muslim couple refused shake hands denied citizenship Switzerland)

எல்லோருடனும் சகஜமாக கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்து -லாசானே நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம் கணவன்-மனைவி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

அதை தொடர்ந்து அவர்களிடம் நகரின் துணை முதல்வர் பியாரே அன்டோனி ஹில்ட்பிரான்ட் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

அப்போது, முஸ்லிம் தம்பதி அவர்களிடம் சகஜமாக கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

இஸ்லாம் சட்டப்படி ஒரு ஆண் சம்பந்தமில்லாமல் பெண்ணுடனும், ஒரு பெண் மற்ற ஆண்களுடனும் கை குலுக்க கூடாது என அவர்கள் காரணம் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முஸ்லிம் தம்பதிக்கு சுவிட்சர்லாந்து குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்துள்ளது.

கைகுலுக்க மறுப்பு தெரிவித்ததால் குடியுரிமை மறுக்கப்படுவதாக முதல்வர் கிரிகோரி ஜூனாட் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் சிரியாவை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் பாடசாலை ஆசிரியைக்கு கைகுலுக்க மறுத்ததால் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Muslim couple refused shake hands denied citizenship Switzerland)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites