பகிடி வதையா… இனி பொலிசாரே நடவடிக்கை எடுப்பார்கள்… எச்சரிக்கின்றார் விஜயதாச

0
242
university higher education raging action police wijayadasa jajapaksha

பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பிலான நடவடிக்கைகளை பொலிஸ் நிலையங்கள் வாயிலாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். university higher education raging action police wijayadasa jajapaksha

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகுடிவதைக்கு எதிராக 1998 ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான பகிடிவதை தடை சட்டத்தின் கடுமையான தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

பகிடிவதை சட்டத்தின் சரத்திற்கு அமைவாக குற்றச் செயல் சட்டத்தின் கீழ் பகிடிவதையை மேற்கொள்வோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று உயர் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
university higher education raging action police wijayadasa jajapaksha

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites