மகப்பேற்று வைத்தியர்கள் இன்றி கிளிநொச்சியில் கர்ப்பிணித் தாய்மார்கள் படும் அவலம்

0
417
tragedy Pregnant mothers Kilinochchi

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியர்கள் இன்மையால் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (tragedy Pregnant mothers Kilinochchi)

கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியர்கள் இருவர் கடமை புரிந்து வந்தனர்.
இந்த நிலையில், வருடாந்த இடமாற்றம் காரணமாக ஒருவர் வெளி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார்.

மற்றைய மகப்பேற்று வைத்தியரும் தமது வெளிநாட்டுப் பயிற்சி நெறிக்காக விடுகை பெற்றுச் சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

வழமையான நடைமுறைகளின் பிரகாரம் மாவட்டப் பொது வைத்தியசாலையான கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கே நோயாளர்கள் இடம்மாற்றம் செய்யப்படுகின்றனர்.

எனினும் தற்பொழுது மாஞ்சோலை வைத்தியசாலையானது, பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் இயங்குகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சியில் இருந்து கர்ப்பிணித் தாய்மார்களை மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றுவது வேதனைக்குரிய விடயம் என்றும் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு இவ்வாறு அனுப்படும் கர்ப்பிணித் தாய்மார் ஒருவருக்கு மேலதிக சிகிசை தேவைப்படும் போது, அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் இருந்து யாழப்பாணம் வைத்தியசாலைக்ளு அனுப்பப்படுகின்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் அண்மையில் நியமிக்கப்பட்ட உள்ளகப் பயிற்சி வைத்தியர்கள் நிரந்தர மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலையில், எவ்வாறு உரிய பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமாரவேல் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடமையில் இருந்த இரண்டு மகப்பேற்றியல் வைத்தியர்களில் ஒருவர் ஒரு மாத சுகயீன விடுப்பில் இருப்பதாகவும், பிரிதொருவர் தனது உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல இருப்பதனாலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

வைத்திய விடுப்பில் இருப்பவர் மீண்டும் தனது கடமைக்கு திரும்பாதுவிடின் நெருக்கடி நிலை ஏற்படும் எனவும் இதுதொடர்பில் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு அனுப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் தற்போது யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கே அனுப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; tragedy Pregnant mothers Kilinochchi