மூன்று வகை பூச்சிக்கொல்லிகளின் தடை; அத்துரலிய ரத்ன தேரர் குற்றச்சாட்டு

0
783
Three types pesticides banned

அமைச்சரவையின் அனுமதியில்லாமல் மூன்று வகையான நச்சு பூச்சிக்கொல்லிகளின் தடையை அண்மையில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். (Three types pesticides banned)

க்லோர்பைரிபொஸ் (Chlorpyripos), கப்ரில் (Cabryl) மற்றும் கர்பொஃப்யுரன் (Carbo furan) எனும் மூன்று வகையான பூச்சிகொல்லிகளின் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும் ரதன் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பூச்சிகொல்லிகள் 2017 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டவை எனவும் அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெறாமல் தடை செய்யப்பட்டுள்ளமை புதிராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனைப் பற்றி அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Three types pesticides banned