நல்லாட்சி அரசின் நல்ல விடயங்கள் ஊடகங்களுக்கு புலப்படவில்லை! ரணில் குற்றச்சாட்டு!

0
275
srilankan rupee down again american dollar prime minister definition

நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்ல விடயங்களை தனியார் ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை அரசாங்கத்தின் தவறுகள் மாத்திரமே அவர்களுக்கு தென்படுகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். Prime Minister Ranil Wickramasinghe Accusing Private Medias Tamil News

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது,

நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளது. இதற்குக் காரணம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசு பெற்ற பெரும் கடன் சுமை ஆகும்.

நல்லாட்சியின் முதல் பணி நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகும். இதற்காக வேண்டி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பல சுதந்திர ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டமை, ஜனாதிபதியின் அதிகாரம் குறைப்பு, காணாமல் போனவர்களின் காரியாலயம், தகவல் அறியும் சட்டம் என்பன குறிப்பிடத்தக்கன.

தற்போது தான் கடந்த அரசாங்கம் பெற்ற கடன் சுமையை குறைத்து வருகின்றோம். தனியார் ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites