தலவாக்கலை பிரதான வீதியில் பாரிய மண்சரிவு – சாரதிகள் அவதானம்

0
401
natural habitat people affected continuous flooding heavy winds

(natural habitat people affected continuous flooding heavy winds)

கடும் காற்றுடன் தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தலவாக்கலை, லிந்துலை, டயகம, கொட்டகலை, ஹட்டன், பொகவந்தலாவ, நுவரெலியா, மஸ்கெலியா போன்ற பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய தொடர்ச்சியாக அடை மழை பெய்து வருகிறது.

இதனால் இன்று மாலை ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்.கிளாயர் பகுதியில் இடம்பெற்ற பாரிய மண்சரிவினால் குறித்த வீதியூடான போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்தோடு பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பஸ் நிறுத்துமிடமும் சேதமாகியுள்ளது.

இந்த பிரதான வீதியினூடான போக்குவரத்து ஒருவழி போக்குவரத்தாகவே இடம்பெற்று வருகின்றது.

எனினும், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மண்சரிவுகள் ஏற்பட்ட வண்ணமே உள்ளது.

இதனால் நுவரெலியா செல்லும் பயணிகளும், ஹட்டன் செல்லும் பயணிகளும் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு பின்புறத்தில் பாரிய மண்சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மண்சரிவு இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் அருகாமையில் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்கு பின்புரமே இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மேலும், கோவிலுக்கு சொந்தமான தேர் ரதத்தினை பாதுகாப்பாக வைத்திருந்த கட்டிடமும் சேதமாகியுள்ளது.

இந்த மண்சரிவினால் ஆலயத்திற்கு எவ்வித பாதிப்புகளும் இல்லையெனவும், பொலிஸார் தெரிவித்தனர்.

(natural habitat people affected continuous flooding heavy winds)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites