ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் தொடர்ந்தும் மண்சரிவு

0
481

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்டிரதன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாய நிலை காரணமாக நேற்று காலை குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டு, மண்சரிவு அகற்றப்பட்ட பின்னர் வழமைக்கு திரும்பியது. (Landslide continues Hatton Colombo main road)

தொடர்ந்தும் நேற்று மாலை குறித்த வீதியில் ஏற்பட்ட மண்சரிவுடன் வீதி முற்றாக மூடப்பட்டதனால் வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வீதி அதிகார சபையினரும், ஹட்டன் பொலிஸாரும் இணைந்து குறித்த வீதிக்கு அருகில் புதிய வீதியை அமைத்து நேற்றிரவு 10 மணி முதல் வீதியில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர்.

இதன் பின்னர் அந்த வீதியின் போக்குவரத்து ஒரு வழிப் போக்குவரத்தாக இடம்பெற்று வருகின்றது.

எனினும், தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வண்ணமே உள்ளது.

இதனால் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Landslide continues Hatton Colombo main road