ஆட்சி நிறைவு பெற இரண்டு வருடங்கள் – ஜப்பானிய பாதுகாப்பு அமை்சசர் இலங்கை விஜயம்

0
401
japan defense declaratory visit India Lankan decide meet president

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடேரா, ஐந்து நாட்கள் பயணமாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ள உள்ளார். japan defense declaratory visit India Lankan decide meet president

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சை தெரிவித்துள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, நாளைய தினம் தமது விஜயத்தை ஆரம்பிக்கும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர், இந்தியாவுக்கு முதலாவதாக பயணம் மேற்கொள்ள உள்ளார்.

பின்னர், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி காலம் நிறைவடைதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் காணப்படுகின்ற நிலையில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வரவுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் வேட்பாளர்களை களமிறக்குவதற்கு முன்பாக ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்டக்குழுவொன்று ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தது.

இதற்கமைய அவரின் இலங்கை விஜயம் இலங்கையில்  மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரின் மனதிலும் சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது.
japan defense declaratory visit India Lankan decide meet president

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites