பேரறிவாளன் மனு மீதான விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

0
390
inquiry petition requested period postponed October

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தரப்பு விரிவான வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையை அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். inquiry petition requested period postponed October

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய், நவீன் சின்கா, கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் தரப்பில் வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகி ராஜீவ்காந்தியை கொல்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் நகல் ஒன்றை ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் வைத்து சி.பி.ஐ. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்திருப்பதாகவும் இந்த மனுவின் மீது விரிவான விசாரணைக்கும், தங்கள் தரப்பில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். inquiry petition requested period postponed October

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுவை அக்டோபர் மாதத்தில் விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites