“அதெல்லாம் நினைவில்லை” சி.ஐ.டி அதிகாரிகளை அலற விட்ட மஹிந்த!

0
721

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (17) மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்தனர். Former President Mahinda Rajapaksa CID Inquiry Statement Tamil News

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஐந்து அதிகாரிகள் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த வாக்கு மூலத்தை பெற்றுக்கொண்டனர்.

தனக்கு கரு ஜயசூரியவும், அலககோனும் தொலைபேசி அழைப்பில் தொடர்பு கொண்டதாகவும் அதனையடுத்து கீத் நொயார் விடுதலை செய்யப்பட்டதாகவும் இவ்வாறு நடந்த சம்பவம் உண்மையா ? எனவும் தன்னிடம் கேட்டதாக மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. வாக்கு மூலம் வழங்கியதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.

தனக்கு அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டமை குறித்து நினைவில் இல்லையென தெரிவித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள வீட்டில் வைத்தே குறித்த வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites