சமையல் எரிவாயு விலை தொடர்பில் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை

0
249
cooking gas price formula introduction government take action

சமையல் எரிவாயு விலை தொடர்பில் விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. cooking gas price formula introduction government take action

நுகர்வோர் விவகார அதிகார சபையே, இந்த சூத்திரத்தை தற்போது தயாரித்து வருகின்றதென, வாழ்க்கைச்செலவுக் குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்த விலைசூத்திரத்தை அமுல்படுத்தினால், உலகச்சந்தையில் காஸின் விலை குறைவடையும் போது, உள்நாட்டிலும் காஸின் விலை குறைவடையும் என்றும் அந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு, காஸ் நிறுவனங்கள் விடுத்திருந்த கோரிக்கை ஆராய்ந்ததன் பின்னரே, சமையல் எரியாவுவின் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளது.
cooking gas price formula introduction government take action

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites