கேரள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்

0
357
Central Government inform Kerala Government National Disaster

கேரள வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடராக எந்தத் தாமதமுமின்றி மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, கேரளாவில் லட்சக்கணக்கான மக்கள் உயிர், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Central Government inform Kerala Government National Disaster 

முன்னதாக ட்விட்டரில் அவர் இட்டுள்ள பதிவில், கேரளா மற்றும் கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் முழு மூச்சுடன் உதவும் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். Central Government inform Kerala Government National Disaster 

காங்கிரசின் சேவை மனப்பான்மை மற்றும் மக்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites