வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி

0
867
Bogawanthalawa Gardens Road drowning flood water

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் மத்திய பிரிவு தோட்ட மக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. (Bogawanthalawa Gardens Road drowning flood water)

கடந்த சில நாட்களாக மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் கால்வாய் ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்ததன் காரணமாக, குறித்த வீதியனாது 03 அடி உயரத்திற்கு வெள்ள நீரில் முழ்கியுள்ளது.

குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தை மேற்கொள்ளும் வாகன சாரதிகள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.

இதேவேளை, காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் மத்திய பிரிவிற்கான கால்வாயை அகலப்படுத்தி தருமாறு குறித்த தோட்டமக்கள் தோட்ட நிர்வாகத்திடமும்,சம்பந்தபட்ட அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் குறித்த ஆற்றினை அகலபடுத்தி தருவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இதற்கான தீர்வை விரைவாகப் பெற்றுத் தர வேண்டுமென்றும் தோட்ட மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Bogawanthalawa Gardens Road drowning flood water