குளிர்பானத்தில் மது குளிசைகள் – பின்னர் கூட்டு பாலியல் – அருகம்பையில் நடக்கும் அவலங்கள்

0
1783
ampara district arugambay drugs use increase police higher officer help

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீராக கடைபிடிக்கப்படுகின்ற போதிலும் பணத்திற்காக சில நேரங்களில் சட்டங்கள் மற்றும் ஒழுங்குகள் ஓரம் சென்று வேடிக்கை பார்ப்பது போன்ற நிலைமைகள் நாட்டில் காணப்படுகின்றன. விடுமுறை காலங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று எங்களது நேரத்தினை செலவு செய்ய சிந்திக்கின்றோம். ampara district arugambay drugs use increase police higher officer help

ஆனால் குறித்த பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமான செயல்கள் இடம்பெறுகின்ற போது அதனை தவிர்த்து அதிலிருந்து விலகி நிற்பவர்கள் சிலர் அதற்கு அடிமையாகின்றவர்கள் பலர்.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உலக சுற்றுலாவிற்கு பிரசித்த பெற்ற இடமாக விளங்கும் அருகம்மை என்ற இடத்தினை அனைவரும் அறிந்திருப்போம்.

இங்கு சர்வதேச அதாவது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களே அதிகம்.

ஆகையினால் அங்கு பயன்படுத்தப்படுகின்ற அல்லது வினோதத்திற்கு உட்படுகின்ற நடவடிக்கைகள் எங்களது கலாசாரங்களை மீறியது மாத்திரமின்றி மனித உயிரை விரைவில் காவு கொள்ளும் பல விடயங்களும் காணப்படுகின்றன.

இதற்கமைய அருகம்பை கடற்பரப்பின் பல்வேறு பகுதிகளில் அலைசறுக்கு விளையாட்டு போட்டிகள் இடம்பெறுகின்றன.

இதில் பங்கேற்பதற்கு வெளிநாட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்வதோடு எமது நாட்டின் பிரஜைகள் பலர் பார்வையாளர்களாக பங்கேற்கின்றனர்.

இதன்போது நடைபெறும் அல்லது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்கள் தொடர்பாக எமது செய்திபிரிவு ஆராய்ந்த புலனாய்வு தகவல்களை கீழே தருகின்றறோம்.

சரியாக காலை 9.30 மணி முதல் ஆரம்பமாகும் அலைச்சறுக்கு போட்டிகள் மாலையில் சுமார் 6 மணியளில் நிறைவடையும்.

அதன்பின்னரே இவ்வாறான அவலங்கள் நடைபெறுகின்றன……

சூரியன் அஸ்த்தமிக்கின்றது… சிலர் வெளிநாட்டு கலாசாரங்களிலான ஆடைகளை அணிந்தவாறு கடற்கரைக்கு வருகை தருகின்றனர்…. பீச் பார்ட்டி எனப்படும் அந்த களியாட்ட நிகழ்வு அப்போதே ஆரம்பமாகின்றது.

இளைஞர் யுவதிகள் பலர் பங்கேற்க தயாரான நிலையில், அரை போதையில் தள்ளாடியவாறு நடனத்தில் பங்கேற்கின்றனர்.

இலங்கையில் இதுவரை அறிமுகம் செய்யபடாத பல பெயர்களை கொண்ட போதை பொருள்களை அரைபோதையில் காணப்படும் இளைஞர் யுவதிகளுக்கு விற்பனை செய்ய ஒரு குழு இயங்குகின்றது.

இதன்போது எமது செய்தி பிரிவிற்கு கிடைத்த சில திடுக்கிடும் வகையிலான போதை பொருட்களின் பெயர்கள் மற்றும் அதன் கட்டணங்களை கீழே தருகின்றோம்.

அயிஸ் என்ற பெயர் கொண்ட போதை பொருளே இங்கு அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த போதை பொருள் 1 கிராமின் விலை 60 ஆயிரம் ரூபாவாகும். அதில் சிறுதுளி பாவிப்பதற்கு 15 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படுகின்றது.

அது மாத்திரமின்றி இதுவரை கேள்விப்பட்டிராத N D M A என பெயர் கொண்ட இந்த போதை பொருள் ஒரு கிராம் 19 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

DMT ஒரு கிராம் 28 ஆயிரம் ரூபாய், ரோஸ் நிற குளிசை 12 ஆயிரம் ரூபாய், குரங்கு முகம் பதித்துள்ள நீல நிற குளிசை 15 ஆயிரம் ரூபாய், கஞ்சா மலர் அடையாளம் பதித்துள்ள குளிசை 19 ஆயிரம், ஹெப்பி வோட்டர் (மகிழ் நீர்) ஒரு சிறிய குப்பியின் விலை 35 ஆயிரம் ரூபாய், கெலிபோர்னியா சன்ஷைன் சிரிய குப்பி 38 ஆயிரம் ரூபாய், ஹெப்பி வோட்டர் மற்றும் சன் ஷைன் ஆகிய போதை பொருளின் ஒரு துளி சுவைக்கு 12 ஆயிரம் ரூபாய், கேரள கஞ்சா ஐந்து கிராம் ஐந்தாயிரம் ரூபாய், நம்நாட்டு கஞ்சா 50 கிராம் 12 ஆயிரம் ரூபாய்.  கொக்கைன் ஒரு கிராம் 13 ஆயிரம் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

குறித்த போதை பொருள் பயன்படுத்தினால் சில நாட்களுக்கு போதையிலிருந்து வெளிப்படுவது கடினம் எனவும், சிலர் போதையிலேயே மரணிக்க வேண்டிய சந்தரப்பங்கள் ஏற்படும் எனவும் எமது செய்தி பிரிவிற்கு வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த பொருள்கள் இலகுவாக அருகம்மை கடற்கரை பீச் வாடிகளில் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த போதை விற்பனை செய்யப்படுவதனால் அப்பகுதியில் வசிப்பவர்களின் குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயம் வெகுவாக போதை பொருட்களுக்கு அடிமையாவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமின்றி அதனை பெற்றுக்கொள்ள கொலை மற்றும் கொள்ளைச்சம்பவங்களிலும் இளைஞர் யுவதிகள் ஈடுபடுவதோடு போதையில் வயது வித்தியாசமின்றி பெண்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்தும் நடவடிக்கைகளிலும் இளைய சமுதாயத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அது மாத்திரமின்றி போதையான பெண்களை இளைஞர்கள் கூட்டு பாலியலுக்கு உட்படுத்தியும் வருகின்றனர்.

மேலும் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெண்களுடன் உடலுறவு கொள்வதனால் எச் ஐ வி எனப்படும் சமூக நோய்க்கும் உட்படுகின்றனர்.

இந்த கலாச்சாரம் நீடிப்பதனால் அம்பாறை மாவட்டம் வெகுவிரைவில் சீரழிந்த ஒரு மாவட்டமாக உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அப்பகுதியில் வசிப்போர் எமது செய்தி பிரிவிற்கு கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
ampara district arugambay drugs use increase police higher officer help

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites