60 வயது மாநிறம் திரைப்பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

0
195
60 Vayathu maaniram movie Release date tamil news

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிய இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ள, “60 வயது மாநிறம்” திரைப்படம் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியாக உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 60 Vayathu maaniram movie Release date tamil news

”மொழி”, ”அபியும் நானும்”, ”பயணம்”, ”அழகிய தீயே” உள்ளிட்ட முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தை கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் ராதா மோகன்.

அந்த வரிசையில் இவர் நடிகை ஜோதிகாவை வைத்து “காற்றின் மொழி” என்ற படத்தை இயக்கியுள்ளார். இப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இதையடுத்து, இவர் “60 வயது மாநிறம்” என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபுவும், நாயகியாக இந்துஜாவும் நடித்துள்ளனர்.

மேலும் பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அண்மையில், “60 வயது மாநிறம்” படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படம் சிறப்பாக இருப்பதாகக்கூறி இயக்குநரை பாராட்டியுள்ளனர். மேலும், படத்துக்கு “யு” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து இந்த படம் ஆகஸ்ட் 31 ஆம் திகதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்துக்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இதனால், இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..!

ஜனனி வீட்டில் துக்க சம்பவம் : அது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் துள்ளிக் குதிக்கும் ஜனனி..!

பிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..!

சர்கார் படத்தின் ‘ரா ரா ராட்சசன்..’ பாடல் லீக் : அதிர்ச்சியில் படக்குழு..!

தள்ளிப்போனது கோலமாவு கோகிலா : ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

சர்வதேச தென்னிந்திய திரைப்பட விருது : 12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட மெர்சல் படம்..!

அதர்வாவின் இமைக்கா நொடிகள் படத்தின் சென்சார் ரிசல்ட் ரிலீஸ்..!

வனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..!

Tags :- 60 Vayathu maaniram movie Release date tamil news