பழைய முறையிலேயே மாகாண சபை தேர்தல் – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு!

0
277
ten general opposition member joint government

தற்பொழுதுள்ள சட்ட ஒழுங்குகளின் படி எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடியும் என பிரதமர் கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் பல தடவைகள் கூறிவருவதாக அமைச்சர் கிரியெல்ல தெரிவித்துள்ளார். Provincial Council Election Minister Lakshman Giriyella Statement Tamil News

இதன்பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமையின் கீழ் நடாத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

புதிய முறைமையின் கீழ் நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஒழுங்குகள் முழுமைப்படுத்தப்படாதுள்ளதாகவும் இதனால், புதிய முறைமையில் நடாத்துவது சாத்தியமில்லாத ஒன்று எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடாத்தும் முறைமை தொடர்பில் கட்சித் தலைவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites