கீத் நொயார் கடத்தல் விவகாரம் : சி.ஐ.டிக்கு மகிந்த இன்று வாக்குமூலம்!

0
653
Former President Mahinda Rajapaksa CID Statement

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ​தொடர்பில் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு, தினமொன்றை ஒதுக்கித்தருமாறு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், நான்கு தடவைகள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்திருந்தனர். Former President Mahinda Rajapaksa CID Statement Tamil News

எனினும், பொருத்தமான தினமொன்றை வழங்காமையை தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கடந்த 12ஆம் திகதியன்று மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கடுமையான முறையில் இன்றைய திகதியை நிர்ணயம் செய்திருந்தனர்.

அதன் பிரகாரம் , இன்று மஹிந்த ராஜபக்‌ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

வாக்குமூலமளிப்பதற்கு, தான் தயாரென மஹிந்த ராஜபக்‌ஷ, சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று, கொழும்பு-07, விஜயராம மாவத்தையிலுள்ள, ராஜபக்‌ஷவின் வாசஸ்தலத்துக்குச் சென்று, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites