தெஹிவளை மசாஜ் நிலைய பெண் முகாமையாளருக்கு எயிட்ஸ்; ஆண்களே அவதானம்

0
906
AIDS Woman Manager dehiwala massage salon

தெஹிவளை மேல் பாலத்திற்கு அருகில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பேரில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்த விபசார விடுதியின் பெண் முகாமையாளருக்கு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (AIDS Woman Manager dehiwala massage salon)

குறித்த பெண் மீது மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் அவருக்கு எயிட்ஸ் தொற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மசாஜ் நிலையத்தை சுற்றிவளைத்துள்ளதுடன், குறித்த பெண் முகாமையாளர் உள்ளடங்க பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 07 பெண்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட பெண்களை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தி பிணையில் விடுவிக்குமாறு கல்கிஸ்சை நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

கடந்த 17 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த பெண் முகாமையாளருக்கு எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இந்த பெண்கள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த போது இவர்கள் அணிந்திருந்த ஆடைகளை சுட்டிக்காட்டி நீதவான் எச்சரித்துள்ளார்.

இவர்களுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியிடம் குறித்த பெண்கள் அணிந்திருக்கும் ஆடை குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; AIDS Woman Manager dehiwala massage salon