யாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்

0
505
Hurricane Jaffna flight Question sheets helicopter

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நெடுந்தீவு பகுதிக்கான உயர்தர பரீட்சைக்கான வினாத் தாள்கள் கடல் வழியாக கொண்டு செல்ல முடியாமல் போனமையினால் ஹெலிகொப்டரின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Hurricane Jaffna flight Question sheets helicopter)

நேற்றும் இன்றும் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் கடல் பயணங்கள் நிறுத்தப்பட்டன.

இதனால் நெடுந்தீவில் பரீட்சை மண்டபங்கள் உள்ளமையினால் நேற்றும் இன்றும் மாணவர்களுக்கான வினாத்தாளை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்த நிலைமை தொடர்பில் யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகம் ஊடாக விமானப் படைக்கு வட மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இவ்வாறு ஹெலிகொப்டரில் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதன் பின்னர் விமானப்படையினர் மூலம் அவர்களுக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் நெடுந்தீவிற்கு கொண்டு செல்லப்பட்டு கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கொண்டு செல்லப்பட்ட வினாத்தாள்கள் மூலம் மாணவர்கள் பிரச்சினையின்றி பரீட்சை எழுதியுள்ளனர்.

அத்துடன், நேற்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம், காரைநகர் பிரதேசத்திலுள்ள 17 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Hurricane Jaffna flight Question sheets helicopter