சுகாதார அமைச்சின் சீருடையால் மத்திய –வட மாகாண அரசுகள் மோதல்!

0
425

குடும்ப நல அதிகாரிகளுக்காக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு அண்மையில் புதிய சீருடையை அறிமுகம் செய்திருந்தது. Health Ministry Uniform Central North Province Government Issue Tamil News

இந்தப் புதிய சீருடை தொடர்பாக அனைத்து குடும்ப நல அதிகாரிகளுக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மூலம் தெரியப்படுத்தப்பட்டது.

எனினும், வட மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகள் புதிய சீருடையை அணியக் கூடாது என்று, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மத்திய சுகாதார அமைச்சுக்கும், வட மாகாண சுகாதார அமைச்சுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

” சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் சுற்றறிக்கைகள், ஒட்டுமொத்த நாட்டுக்குமே பொருத்தமுடையது. மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதனை அணியக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தாலும், வடக்கு மாகாணத்தில் உள்ள குடும்ப நல அதிகாரிகளும் புதிய சீருடையையே அணிய வேண்டும்” என்று கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites