தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ரம்பா, மூன்றாவது குழந்தைக்குத் தாயாகிறார். அவரின், வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Rambha third child Valaikappu photos vairal tamil news
இவர் கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, லான்யா மற்றும் சாஷா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சில ஆண்டுகளில் கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால், விவாகரத்து கோரினார் ரம்பாவின் கணவர். இந்நிலையில், கணவன் – மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் நடிகை ரம்பா.
இதில் தன்னுடைய கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதையடுத்து, நடந்த சமரச பேச்சுவார்த்தையில் இருவரும் மீண்டும் ஒன்றிணைந்தனர்.Rambha third child Valaikappu photos vairal
இந்நிலையில் தற்போது, கனடாவில் வசித்துவரும் ரம்பா மூன்றாவது குழந்தைக்குத் தாயாக உள்ளார். அதனால், உறவினர்கள் புடைசூழ, இந்திரன் பத்மநாதன் தன் மனைவிக்குக் கோலாகலமாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அப்போது, எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக நடனமாடும் காட்சிகளை, தனது இஸ்டாகிராமில் ரம்பா பதிவு செய்துள்ளார்.
அதனுடன், “எனது கடந்த காலத்தைத் திருப்தியுடன் நான் மீண்டும் பார்க்கிறேன், அதேவேளையில் என் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்குகிறேன்” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும், ரம்பா வெளியிட்டுள்ள புகைப்படங்களில், நீல நிறப்புடவையில், கைகள் நிறைய வளையல் அணிந்து ரம்மியமாக உள்ளார். இச் சீமந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!
* விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!
* நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!
* காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* டேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..!
* ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!
* படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!