கழுகு-2 படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!

0
178
Kazhugu2 movie Distribution rights sold tamil news

கடந்த 2012 ஆம் ஆண்டு, சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான “கழுகு” படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் கழுகு-2 என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது. Kazhugu2 movie Distribution rights sold tamil news

இப்படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார்.

இந்நிலையில், திருப்பூர் பி.ஏ.கணேசன் தயாரிக்கும் இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டென்மெண்ட் கைப்பற்றியிருக்கிறது.

இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவரது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படமானது, அண்டை மாநிலத்தின் முதல்வர் ஒருவரின் ஹெலிகாப்டர் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்குகிறது. அதனை தேடிக் கண்டுபிடிக்க ராணுவத்துடன் அந்த ஊர் மக்களும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனை மையப்படுத்தி உருவாகி வருகின்றது.

<<MOST RELATED CINEMA NEWS>>

சாயிஷாவுடன் காதல் வலையில் வீழ்ந்த பிரபுதேவா.. : கிளம்பிய கிசுகிசுக்கள்..!

விஜய் அழகானவர் – சூர்யா ரொம்ப நல்லவர் : பெரிய ஆட்களுக்கு ஐஸ் வைக்கும் ஸ்ரீ ரெட்டி..!

குழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..!

நான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..!

மூன்றாவது குழந்தைக்கு தாயாகும் ரம்பாவின் வளைகாப்பு புகைப்படங்கள்..! (படங்கள் இணைப்பு)

வீட்டு ஞாபகத்தால் ஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங் : நடிப்புக்கு முழுக்கு போட முடிவு..!

ஸ்ரீரெட்டி வெளிப்படையாக கூறுவது சரிதான் : ஆதரவாக குரல் கொடுத்த ஆண்ட்ரியா..!

படப்பிடிப்பில் விபத்து : சிகிச்சைக்காக கொச்சி பறந்த நடிகை அமலாபால்..!

Tags :-Kazhugu2 movie Distribution rights sold tamil news