கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையை படமாக்கும் கபாலி இயக்குனர்

0
196
Kabali director ranjith next biopic tamil news

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இணைய தொடராக தயாரிக்க உள்ளார் பா.ரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பா.ரஞ்சித் இறுதியாக தமிழில் இயக்கிய படம் காலா. இந்தப் படம் எல்லோரின் கவனத்தையும்  ஈர்த்தது. மூன்றாம் நான்காம் படங்களிலேயேசூப்பர் ஸ்டாரை ஹீரோவாக வைத்து இயக்கியவர் என்ற பெருமைக்கு உரியவர் பா. ரஞ்சித். Kabali director ranjith next biopic tamil news

பா. ரஞ்சித்  நமா பிக்சர்ஸ் என்ற பாலிவுட் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் என இணையத்தில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தற்போது சமீபகாலமாக தமிழ் சினிமா பிரபலங்கள் இணைய தொடர்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவை NETFLIX இல் வெளியாகி நல்ல வரவேற்பை தருகிறது.

ரஞ்சித்தும் ஒரு இணைய தொடர் தயாரிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாக இருப்பதாகத் தெரிகிறது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ஏற்கனவே டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் படமாகவும் ரிலீசானது. எனவே, அவரது வாழ்க்கையில் நடந்த பரபரப்பான சம்பவங்களைத் தொகுத்து இந்த இணைய தொடரை ரஞ்சித் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Tags: Kabali director ranjith next biopic tamil news

எமது ஏனைய தளங்கள்